Sarkar Real Collection

Sarkar Real Collection : தளபதி விஜயின் சர்கார் படம் பெரிய லாபம் ஒன்றும் இல்லை என பிரபல தயாரிப்பாளர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருந்த சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்தது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களையும் விமர்சகர் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.

ஆனால் உலகம் முழுவதும் படம் நல்ல வசூலையே பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பிரபல விநியோகிஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர் கூறியிருப்பதாவது சர்கார் படத்திற்கு விநியோகிஸ்தர்கள் போட்ட பணத்தை எடுத்து இருப்பார்கள். ஒரு சிலருக்கு லாபம் கிடைத்திருக்கலாம் என கூறியுள்ளார்.

ஆனால் பெரிய லாபம் இல்லை. தமிழகத்தில் ரூ 70 கோடி முதல் ரூ 80 கோடி ரூபாய் வரை தான் வசூல் கிடைத்திருக்கும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here