Sarkar 3rd day collection

Sarkar 3rd Day Collection : சர்கார் படத்தின் வசூல் மூன்றாவது நாளிலேயே குறைய தொடங்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி இருந்த இந்த படம் தொடர் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

படத்தில் ஜெயலலிதாவையும் அவரது இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட பொருட்களையும் இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக அதிமுக தரப்பில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது சென்னையில் மூன்றாம் நாள் குறித்த வசூல் நிலவரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முதல் இரண்டு நாளிலேயே சென்னையில் மட்டுமே ரூ 4.69 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. இந்நிலையில் மூன்றாம் நாளில் வெறும் ரூ 1.2 கோடி தான் வசூல் கிடைத்துள்ளது.

இதற்கு அதிமுக தொண்டர்கள் நடத்தி வரும் போராட்டங்களே காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பெரும்பாலான தியேட்டர்கள் முன்பு பேனர் கிழிப்பு, போராட்டம் என நடத்தி வருவதால் தியேட்டருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here