Sarkar

தளபதி விஜயின் சர்கார் படத்தின் வியாபார நிலவரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை பிரம்மிக்க வைத்து வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடிக்கடி சர்கார் பட அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை எப்போது உற்சாகத்தில் உச்சத்திலேயே வைத்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் சர்கார் படம் ரூ 120 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாகவும் தமிழகத்தில் மட்டுமே ரூ 80 கோடிக்கு அதிகமாக விற்பனையாகி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜயின் திரையுலக வரலாற்றிலே சர்கார் தான் அதிக தொகைக்கு விற்பனையான படம் என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.