Sarkar BO Record

Sarkar BO Record : இந்த வார ஆரம்பதில் சர்கார் படத்தின் நிலவரம் என்ன? மக்களின் வரவேற்பு எப்படி என பிரபல தியேட்டர் உரிமையாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். தீபவாளிக்கு வெளியான இந்த படம் விமர்சகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.

ஆனால் படம் வசூலில் வேற லெவலில் வேட்டையாடி வருகிறது. படம் வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கிய நேற்று படத்தின் வசூல் எப்படி இருந்தது?

மக்களின் கூட்டம் எப்படி இருந்தது என சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது நேற்றும் தங்களுடைய தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் படத்தின் வசூலும் நன்றாக இருந்ததாகவும் டீவீட்டியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சர்கார் இடைவிடாது சாதனை படைத்து வருவதை எண்ணி கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.