Sarkar 10 day Collection

Sarkar 10 Day Collection : எண்ணி பத்தே நாட்களில் பாக்ஸ் ஆபீசில் வசூலில் பேயாட்டம் ஆகியுள்ளது சர்கார் படம். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் தான் என்றாலும் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டும் தான் கிடைத்து வருகின்றன.

படம் வெளியான முதல் நாளே சென்னையில் ரூ 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அபார சாதனை படைத்து இருந்தது.

தற்போது வரை 10 நாளில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 214.3 கோடி வசூல் செய்து மெகா சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படம் ஸ்போர்ட்ஸை மையமாக கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் அடுத்து வருட தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவித்து விட்டனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.