Sardar Statue

Sardar Patel Statue:

உலகின் மிக உயரமான வல்லபாய் படேல் சிலை திறப்பு , இன்று நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இன்று ‘ 143-வது பிறந்த நாள்’ .

பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு , உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், ஒற்றுமையை பட்டேல் பறைசாற்றியதன் காரணமாக, அவரது உருவ சிலையை மிகவும் பிரம்மாண்டமான, உயரமான சிலையாக வைக்கப்பட்டுள்ளது .

இந்த சிலையின் உயரம் 182 அடியாகும், மேலும் உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையை இந்த சிலை பெற்றுள்ளது.

இதன் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். குஜராத் மாநிலத்தில், நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே, மிக பிரம்மாண்டமாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிலைக்கு ” ஒற்றுமையின் சிலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.