“சர்தார்” படத்திற்கு டப்பிங் பேசும் கார்த்தியின் வீடியோவை இயக்குனர் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் கார்த்திக் கதாநாயகனாக தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் “சர்தார்”. இப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இந்த ‘சர்தார்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கின் போது கார்த்தியுடன் நடந்த உரையாடல் வீடியோவை இயக்குனர் மித்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இயக்குனர் மித்ரன் கார்த்தியிடம் கொஞ்சம் நாயகன் கமல் சார் போல் பேசுங்கள் இந்த வசனம் அதிலிருந்து இன்ஸ்பயராகி எழுதியது என்று கூறுகிறார்.

அதற்கு கார்த்திக் எங்க நீங்க பேசி காட்டுங்க.. என்று கேட்டுள்ளார். அதற்குப் பின் நமக்கு என்ன வருமோ அந்த ஸ்டைல்ல போய்டுவோம்” என்று கூறிவிட்டு “நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் நாற்பதாயிரம் பேருக்கு தெரியுற மாறி பண்ணனும்” என்று படத்தில் இடம்பெற்ற வசனத்தை டப்பிங்கில் பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவை இயக்குனர் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.