Saravanan Nominates Cheran : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao

Saravanan Nominates Cheran  :

சேரனை நாமிநேட் செய்த சரவணன், அவர் இங்கும் டைரக்டராகவே இருக்க பார்க்கிறார்.. டாமினேட் செய்கிறார் என கூறினார். இதற்கு சேரனின் ரியாக்‌ஷன்தான் தற்போது சமூக வலைதளங்களின் வைரல்.

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசன் அண்மையில் துவங்கியுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

இதில் சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செரின், சாக்ஷி அகர்வால், மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

மேயாத மான் இந்துஜாவா இது? என்னம்மா இப்படி ஆகிட்ட – வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

முதல் வாரம் இந்த நிகழ்ச்சி ஜாலியாகத்தான் சென்றது ஆனால் தற்போது தான் பிக் பாஸ் வீட்டுக்குள் கலவரம் வெடிக்கத் தொடங்கியுள்ளது தினம் தினம் ஒரு சண்டை தினம் தினம் ஒரு பிரச்சினை என யாராவது அழுது கொண்டே இருக்கிறார்கள்.

இந்த வாரம் நாமினேஷன் தொடங்குவதால் மேலும் பரபரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சேரனை நாமிநேட் செய்த சரவணன், அவர் இங்கும் டைரக்டராகவே இருக்க பார்க்கிறார்.. டாமினேட் செய்கிறார் என கூறினார். இதற்கு சேரனின் ரியாக்‌ஷன்தான் தற்போது சமூக வலைதளங்களின் வைரல்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.