Saravana Stores Saravana
Saravana Stores Saravana

Saravana Stores Saravana – சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தனது தனது கடைகளின் விளம்பரங்களுக்கு பெரிய ஹீரோக்களை எதிர்ப்பார்க்காமல் தானே நடித்து அசத்தினார்.

இதற்காக பலர் அவரை கிண்டல் செய்தாலும் தன் வாடிக்கையாளர் என்னை நம்பிதான் வாங்குகிறார்கள்.. அப்போ நானே விளம்பரத்தில் நடித்தால் தானே சரியாக இருக்கும் என அதற்கு விளக்கமளித்தார்.

அவ்வப்போது இவர் சினிமாவில் நடிப்பதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தான் ஹீரோவாக நடித்தால் நயன்தாரா தான் அந்த படத்தின் நாயகி என சரவணன் ஒருமுறை கூறியிருந்தார். அதன்படி இந்த படத்தில் நயன்தாராதான் ஹீரோயின் என ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் அது உண்மையில்லையாம். இதுவரை இப்படத்தின் நாயகி யார் என்பது முடிவாகவில்லையாம்.