தளபதி 66 படத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பது பூஜை புகைப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

Sarathkumar in Thalapathy 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதனை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.

தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க எஸ்எஸ் தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த பூஜையில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தண்ணா, படக்குழுவினர் உட்பட தமிழ் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் தளபதி 66 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.