3 இலட்சம் ரூபாய் பணப் பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு உள்ளே வந்த சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Sarath Kumar Salary for Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளது.

‘நமசிவாய’ என்பதன் பொருள் என்ன?

இந்த நிலையில் நேற்று பிரபல நடிகர் சரத்குமார் கையில் 3 லட்சம் ரூபாய் பண பெட்டியுடன் உள்ளே சென்றார். உள்ளே சென்ற அவர் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்பவர்கள் செல்லலாம் என கூறினார். ஏற்கனவே கோட்டீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களிடம் சூப்பராகவே பேசினார்.

Kottachi-யின் மகளின் பேச்சால் கை எடுத்து கும்பிட்ட Suseenthiran 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

பொதுவாக இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பெரிய நடிகர்கள் சும்மா வந்து விடுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆமாம் பிக்பாஸ் வீட்டிற்குள் பண பெட்டியுடன் வந்த சரத்குமாருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் தொகுத்து வழங்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.