Sarath Kumar Press Release
Sarath Kumar Press Release

Sarath Kumar Press Release – சென்னை:தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை எதிர்த்து நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

சமக தலைவர் சரத்குமார் ஸ்டெர்லைட் ஆலை குறித்து, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கடந்த மே 22ம்தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால்,

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனத்திற்கு கடந்த மே மாதம் 28ம்தேதி அன்று தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டது.

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறினார்.

மேலும் இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த மேல்முறையீட்டில், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இவ்வாறு தெரிவித்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விசாரணையின் போது, வெளியாட்களின் மூலமாகவும், உண்மைக்கு புறம்பாகவும், பல செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள் தவிர்த்து,

இத்தகைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது தான் மக்களின் கருத்து என அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

மேலும் “ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களின் தற்போதைய மனநிலையையும், ஆலையை திறந்தால் மீண்டும் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியாகும்.

நேர்மையான ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், ஆலையை திறந்தால் ஏற்பட கூடிய விளைவுகளை கருத்தில் கொண்டு நேர்மையான அறிக்கையை சமர்பிக்க வேண்டும்”. இவ்வாறு சமக தலைவர் சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.