விஜய் உடன் இணைந்து ஏன் இதுவரை நடிக்கவில்லை என்பது குறித்து சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ள காரணம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி என்ற அன்போடு அழைக்கப்பட்டு வரும் தளபதி விஜய் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய்யுடன் இதுவரை ஏன் நடிக்கவில்லை!!… சரண்யா பொன்வண்ண பகிர்ந்துள்ள காரணம்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தளபதி விஜய் உடன் ஏன் இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பது குறித்து பகிர்ந்து இருக்கிறார். அதாவது நடிகை சரண்யா பொன்வண்ணன் இதுவரை அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார். ஆனால் தற்போது வரை விஜய்யுடன் மட்டும் அவர் இணைந்து நடிக்கவில்லை இது குறித்து பேட்டியாளர் ஒருவர் அவரிடம் கேள்விஎழுப்பி இருக்கிறார்.

விஜய்யுடன் இதுவரை ஏன் நடிக்கவில்லை!!… சரண்யா பொன்வண்ண பகிர்ந்துள்ள காரணம்.

அதற்கு அவர் கூறியது, ஆமாம் இதுவரை நான் விஜய்யுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை, என்னன்னே தெரியல என கூறியுள்ளார். அதற்கு இதனால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்று போட்டியாளர் கேட்டிருக்கிறார் அதற்கு அவர் வருத்தம் அப்படி என்றதைவிட ஏன் அப்படி என்ற கொஸ்டின் மார்க் தான் இருக்கு எனக்கு அது ஏதோ திருஷ்டி மாதிரி நடக்க மாட்டேங்குது அது என்னன்னு தெரியல என்று கூறியிருக்கிறார். விரைவில் அதுவும் நடக்கும் என்று நினைக்கிறேன் என்றும் மேலும் சில சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்க்கு அம்மாவாக நடிக்காததற்கு காரணம் "திருஷ்டி" தான்..- நடிகை சரண்யா ! #shorts #shortsfeed #vijay