Saranya Mohan Revealed Velayudham Secrets
Saranya Mohan Revealed Velayudham Secrets

படப்பிடிப்பில் தளபதி விஜய் காட்சி ஒன்றிற்காக நிஜமாகவே தேம்பி தேம்பி அழுததாக நடிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Saranya Mohan Revealed Velayudham Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வேலாயுதம்.

மோகன் ராஜா இயக்கிய இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். தளபதி விஜயின் தங்கையாக சரண்யா மோகன் நடித்திருந்தார்.

இந்த படத்தில் சரண்யா மோகன் இறந்த பிறகு தளபதி விஜய் உண்மையாகவே தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.

நிஜ வாழ்க்கையில் தன்னுடைய தங்கை வித்யா என்பவர் இறந்து விட்டதால் அவருடைய ஞாபகம் இந்த படப்பிடிப்பின் போது விஜய்க்கு வந்துள்ளது.

இதனால் தான் விஜய் உண்மையாகவே கலங்கி கலங்கி அழுததாக சரண்யா மோகன் பேட்டி ஒன்றில் கண் கலங்கியபடி கூறியுள்ளார்.