Saranya About Ayutha Ezhuthu Serial Dropped
Saranya About Ayutha Ezhuthu Serial Dropped

ஆயுத எழுத்து சீரியல் திடீரென முடித்து வைக்கப்பட்டது பற்றிய சீரியல் நடிகை சரண்யா வீடியோ வெளியிட்டுள்ளார்

Saranya About Ayutha Ezhuthu Serial Dropped : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று ஆயுத எழுத்து. மாமியார் மருமகள் பிரச்சினைகள் பற்றி இந்த சீரியலில் பேசப்பட்டு வந்தது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஓரிரு மாதங்கள் சீரியல்களில் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாமல் இருந்து வந்தன. இதனையடுத்து மீண்டும் சீரியல்கள் படப்பிடிப்புகள் தொடங்கியும் பல்வேறு சீரியல்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது.

அப்படி ஆயுத எழுத்து சீரியலின் படப்பிடிப்புகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டு இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர்.

சிம்பு தவறவிட்ட டாப் 10 படங்கள் – இதெல்லாம் நடித்திருந்தால் STR வேற லெவல் தான் (லிஸ்ட்டுடன் இதோ)

மேலும் இதற்கான உண்மை காரணம் என்ன என்று இதுவரை சீரியல் குழு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சரண்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இந்த சீரியல் முடிவுக்கு கொண்டு வந்ததற்கான காரணம் என்ன என பலரும் என்னிடம் கேட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் எனக்கும் காரணம் தெரியவில்லை.

ஒருவேளை இந்த சீரியலை முடிவுக்குக் கொண்டு வர காரணம் என்ன என்பது எனக்குத் தெரிந்தால் நிச்சயம் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி எனவே விரைவில் வேறு ஒரு சீரியலில் உங்களை சந்திப்பேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CFSaJH-Agop/?igshid=18oy3lgcfqoko