Thuppaakki 2
பிகில் படம் மாஸாக ஓடி கொண்டிருக்கும் நிலையில் விஜயின் துப்பாக்கி 2 படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி சரவெடியாக வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

பிரபலங்கள் பலரும் பிகில் படம் பார்த்து விட்டு தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

விஜய் சார் பிகில் இசை வெளியீட்டு விழாவில் உங்கள் பேச்சு சூப்பர், படமும் சூப்பர்.. நான் இப்போ துப்பாக்கி 2 படத்தை எதிர்பார்க்கிறேன் என கூறி டீவீட்டியுள்ளார்.

இதனால் துப்பாக்கி 2 உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.