Santhosh P Jayakumar Apologies to Bharathi Raja
Santhosh P Jayakumar Apologies to Bharathi Raja

இரண்டாம் குத்து படத்தின் டீசர் சர்ச்சை விவகாரத்தில் பாரதி ராஜா மற்றும் பலரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இயக்குனர் சந்தோஷ் தற்போது புதியதொரு முடிவை எடுத்துள்ளார்.

Santhosh P Jayakumar Apologies to Bharathi Raja : தமிழ் சினிமாவில் ஹரஹர மஹாதேவகி இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவர் அடுத்ததாக இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படமும் அடல்ட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்த படத்தின் டீசரை பார்த்து விட்டு இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா இப்படி எது போஸ்டரை பார்க்கவே கண் கூசுகிறது என கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் உங்கள் இயக்கிய டிக் டிக் டிக் படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு கண் கூசவில்லையா என கேள்வி எழுப்பி ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

பாரதிராஜாவின் அறிக்கைக்கு இவர் இப்படி ஒரு பதிலடி கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சந்தோஷ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குனர் பாரதி ராஜா கூறிய கருத்துக்கு நான் அப்படி பதிலளித்து இருக்கக் கூடாது. அவசரத்தில் என்ன செய்வது என தெரியாமல் அப்படியொரு பதிலை அளித்து விட்டேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனி இரண்டாம் குத்து திரைப்படம் குறித்து வெளியாகும் போஸ்டர்கள் அனைவரும் பார்க்கும் படியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.