Santhosh Narayanan Review on Karnan

கர்ணன் படத்தை குறித்து சந்தோஷ் நாராயணன் டுவீட் செய்துள்ளார்.

Santhosh Narayanan Review on Karnan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவரது நடிப்பில் “ஜகமே தந்திரம்” திரைப்படம் வெளியாக உள்ளது.

அடுத்ததாக தனுஷ் நடிப்பிலும் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் கர்ணன். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய வேடத்தில் காமெடி நடிகரான யோகிபாபுவும் நடித்துள்ளார். இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து உள்ளார்.

தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் திரைப்படத்தை பார்த்துவிட்டு “திகைத்துப் போனதாகவும்” “கர்ணன் அனைத்தையும் கொடுப்பான்” எனவும் கூறியுள்ளார்.

இது தனுஷ் ரசிகர்களுக்கு இடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் தனுஷ், மாரி செல்வராஜ், மற்றும் படக்குழுவினர்களை பார்த்து பெருமைப்படுவதாகவும் அதில் கூறியுள்ளார்.