விஜய் சேதுபதி, கருணாஸை தொடர்ந்து சந்தானமும் தன்னுடைய மகனை திரையுலகில் அறிமுகப்படுத்த உள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் சந்தானம்.

அதன் பிரகு ஹீரோவாக அவதாரம் எடுத்த சந்தானம் இனி நடித்தால் ஹீரோ தான் என உறுதியாக இருந்து வருகிறார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.

அப்படி இவரது நடிப்பில் டகால்டி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் யோகி பாபுவும் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து சந்தானம் டிக்கிலோனா என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குனரான விஜய் ஆனந்த் இயக்க உள்ளார்.

இப்படத்தில் நடிகர் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய மகனை அறிமுகப்படுத்தி இருந்தார்.

அதன் பிறகு கருணாஸ் அசுரன் படத்தின் மூலமாக தன்னுடைய மகன் கென்னை அறிமுகப்படுத்தி இருந்தார். இவர்களை தொடர்ந்து நடிகர் சந்தானமும் தன்னுடைய மகனை அறிமுகப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Santhanam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here