மீண்டும் காமெடியனாக நடிக்க தயாரான சந்தானத்தின் பேட்டி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக ஜொலித்து தற்போது முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டி நடித்து வருபவர் தான் நடிகர் சந்தானம். கவுண்டர் அடிப்பதில் கை தேர்ந்த இவர் தனது நகைச்சுவை பேச்சால் அனைத்து ரசிகர்களையும் சிரிக்க வைத்து தன் வசம் படுத்தியுள்ளார். ஆனால் தற்போது இவர் சில வருடங்களாக காமெடியனிலிருந்து ஹீரோவாக மாறி மாஸ் காட்டி நடித்து வருகிறார்.

மீண்டும் காமெடியனாக நான் தயார்!!… மனம் திறந்த சந்தானம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன ஆனால் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் கடைசியாக வெளியான குளுகுளு திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மீண்டும் காமெடியனாக நான் தயார்!!… மனம் திறந்த சந்தானம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

இந்நிலையில் சந்தானம் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள ‘கேப்டன்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், நான் காமெடியனாக தான் இந்த சினிமாவிற்குள் வந்தேன். இப்போது கூட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகம் எடுத்தால் ஆர்யாவுக்கு காமெடியனாக நடிக்க நான் தயார். எனவே நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இப்படி மீண்டும் காமெடியனாக நடிக்க தயாராக இருக்கும் சந்தானத்தின் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.