Santhanam Next : சூப்பர் ஹிட் இயக்குனரின் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பொண்ணா? – முதல் முறையாக வெளியான வீடியோ.!

இறுதியாக சந்தானத்தின் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் வசூல் வேட்டையாடிதை தொடர்ந்து இவர் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் கண்ணன் தான் சூப்பர் ஹிட் படங்களான இவன் தந்திரம், பூமராங் ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க காமெடி கலாட்டா படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படபிடிப்புகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளது.

Santhanam Next

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.