தளபதி விஜய்யை சீண்டிய மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சஞ்சீவ் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


Sanjeev Reply to Meera Mitun : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில தினங்களாகவே நடிகர் விஜய்யையும் மற்றும் நடிகர் சூர்யாவை மிகவும் மோசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சனம் செய்து வருகிறார்.


இதனால் ஒட்டுமத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மீரா மிதுனை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே பலர் மீராவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 


அந்த வகையில் தற்போது நடிகரும் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.


அதாவது சிம்பிளாக இக்னோர் நெகட்டிவிட்டி என கூறியுள்ளார். இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சரியாக சொன்னீர்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர். 


மேலும் விஜய் ரசிகர்களும் இதை இப்படியே பின்பற்றினால் மீரா மிதுன் தானாக அடங்கி விடுவார் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/sendilkmr90/status/1291058727160672257?s=19
https://twitter.com/bigilsundar1/status/1291053599535972354?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.