Sanjeev Interview About Suriya

சூர்யாவுக்கு நடிக்கவும் வராது ஆடவும் வராது என தளபதி விஜய்யின் நண்பர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Sanjeev Interview About Suriya : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா.பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் சூர்யா தன்னுடைய விடாமுயற்சி மற்றும் திறமையால் இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இப்படியான நிலையில் தளபதி விஜயின் நண்பன் சஞ்சீவ் பேட்டி ஒன்றில் சூர்யா குறித்து பேசியுள்ளார். நான் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் ஒரே காலேஜில்தான் படித்தோம்.

சூர்யாவுக்கு நடிக்கவும் வராது ஆடவே வராது ஆனா இப்போ?? - தளபதி விஜயின் நண்பர் ஓபன் டாக்.!!

சினிமாவிற்கு வந்த புதிதில் அவனுக்கு நடிக்கவும் வராது டான்ஸ் ஆடவும் வராது. ஆனா இன்னைக்கு வேற லெவல்ல நடிக்கிறார். நடனம் ஆடுகிறார். ஒன்றரை டன் வெயிட்டு பாக்குறியா என டயலாக் எல்லாம் பேசுகிறார்.

இன்னைக்கு சூர்யாவுக்காக ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அதற்கெல்லாம் காரணம் அவருடைய விடாமுயற்சியும் திறமையும் மட்டும் தான். அவர் இந்த அளவுக்கு டான்ஸ் ஆட கிஷோர் மாஸ்டர் தான் காரணம் என பேசியுள்ளார்.

நடிகர் சஞ்சீவ்வின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.