ஒரு சொகுசு காரை கிஃப்ட்டாக வாங்கி கொடுத்துள்ளனர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.

Sanjeev in Costly Gift to Brother : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடி போட்டு நடித்து பின்னர் ரியல் ஜோடியாக மாறியவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் தற்போது சின்னத்திரையில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.

இந்த நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி சொகுசு கார் ஒன்றை சஞ்சீவின் தம்பிக்கு பரிசாக அளித்துள்ளனர். இந்த புகைப்படத்தை சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவருடைய தம்பிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.