இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமாக இருப்பதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

Sanjeev Announced Alya Manasa in Second Preganancy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி நிஜ வாழ்க்கையிலும் ஜோடி அவர்கள் சஞ்சீவ், ஆல்யா மானசா. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு அழகிய மகள் பிறந்தாள்.

இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆலியா மானசா.. சஞ்சீவ் வெளியிட்ட தகவல் - அப்போ ராஜா ராணி 2??
ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? : பிரபல வழக்கறிஞர் இன்று வாதாடுகிறார்..

ஆலியா மானசாவின் மகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டார். கர்ப்பமான பிறகு உடல் எடை கூடி செம குண்டாக மாறிய ஆலியா மானசா பிரசவத்திற்கு பிறகு கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்து பழையபடி மாதிரி ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

உயிர் உள்ளவரை அவருக்கு நான் அடிமை! – Actor Bonda mani Speech | Muthal Manithan Audio Launch

இந்த நிலையில் தற்போது சன் டிவியில் கயல் என்ற சீரியலில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சஞ்சீவ். இதுகுறித்து ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் லைவ் சாட்டில் பேசியபோது ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இவர் கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அப்படி இல்லையென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பாணியில் சீரியலிலும் ஆலியா மானசா கர்ப்பம் ஆவது போல காட்சிகள் மாற்றி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.