Sanjeev And Alya Manasa
ஆலியா மானசா, சஞ்சீவ் வீட்டிற்கு புது வரவு வரவிருப்பதை அறிந்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.

இவர்கள் இருவரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்ததால் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டு தற்போது ரியல் ஜோடியாகி விட்டனர்.

திருமணத்தை தொடர்ந்து புது வீடு வாங்கியும் குடியேறிய இவர்களுக்கு மேலும் ஒரு சந்தோசமான விசியம் நடந்துள்ளது. அதாவது ஆலியா மானஸா தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.

இதனை சாமீபத்தில் தர்மபுரியில் நடந்த விஜய் டிவி நட்சத்திரங்கள் கொண்டாட்டத்தில் சஞ்சீவ் அறிவிக்க ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.