விஜய்யின் நெருங்கிய நண்பராக இருந்தாலும் தனக்கு அவர் வாய்ப்பு வாங்கி கொடுக்காதது ஏன் என சஞ்சீவ் பேசியுள்ளார்.

Sanjeev About Thalapathy Vijay : தமிழ் சின்னத்திரையில் திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சஞ்சீவ். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.

தளபதி விஜயின் மிக நெருங்கிய நண்பரான இவர் விஜயுடன் இணைந்து ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் முன்னணி நடிகராக இருந்தாலும் தனக்கு வாய்ப்பு வாங்கி தராதது ஏன் என பேசியுள்ளார்.

அதாவது எங்களது நட்புக்குள் ஒரு பாலிசி இருக்கிறது. பர்சனலாக எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். ஆனால் தொழில் ரீதியாக யாரும் யாரிடமும் எந்தவித உதவியையும் கேட்கக் கூடாது என்பதுதான் அந்த பாலிசி. உன்னோட வேலையை நீ பாரு என்னோட வேலையை நான் பார்க்கிறேன் என்று தான் இருப்போம். ஆனால் பர்சனலாக ஏதாவது பிரச்சனை என்றால் அந்த விஷயம் தெரிந்த உடனே ஓடி வந்து உதவிடுவார் விஜய் என சஞ்சீவ் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

பாரதிராஜா சார் எனக்காக வருத்தப்பட்டார் – Interview With Actor Vasanth Ravi | Rocky Movie

இந்திய தேர்வுக்குழு திறமையாய் கலந்துரையாட வேண்டும் : பாக். முன்னாள் கேப்டன் அப்ரிடி

அதனால்தான் பெரியதாக விஜய் படங்களில் நடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். எனக்காக அவர் வாய்ப்புகளை வாங்கித் தராததால் காரணம் இது ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார் சஞ்சீவ்‌.