ரூபாய் 10 கோடி சம்பளத்தில் வில்லன் நடிகரை கமிட் செய்துள்ளது தளபதி 67 படக்குழு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

10 கோடி ரூபாய் சம்பளத்தில் வில்லன் நடிகரை கமிட் செய்த தளபதி 67 படக்குழு? - யார் அவர் தெரியுமா?

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 67 வது படத்தை நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இது குறித்த ஆவல் அதிகமாக இருந்து வருகிறது.

10 கோடி ரூபாய் சம்பளத்தில் வில்லன் நடிகரை கமிட் செய்த தளபதி 67 படக்குழு? - யார் அவர் தெரியுமா?

மேலும் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் பரவிய நிலையில் தற்போது இது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.