Kadan Thollai Neenga

☆ பைரவர்:

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் – ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

☆ படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில்  பூசிய விபூதியும் குறிக்கும்.

☆ இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர்விளங்குகின்றார்.

☆ பொதுவாக அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும். அன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும். மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடந்தேறும்.

☆ மேலும் செவ்வாடை சாத்தி, சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி, வெல்லம் கலந்த பாயசம், உளுந்து வடை, பால், தேன், பழம் நிவேதனம் செய்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல யோகங்களும் வந்து சேரும்.

☆ இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here