Sani Bhagavan : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Sani Bhagavan Temple

Sani Bhagavan :

சனி பகவான் பிறந்த கதை:

@ சனி பகவான் யமனின் சகோதர் என்றும், நீதியின் அரசர் என்றும் கூறப்படுகிறது. சூரிய பகவானின் மனைவியான சாந்தா ஒரு சிறந்த சிவபக்தை ஆவார்.

இவர்களுக்கு வைவாஸ்வதா மனு, யமன் மற்றும் யமி என்ற மூன்று குழந்தைகள் இருந்தன. சாந்தா சிவனை நோக்கி தீவிர தவம் புரிய முடிவெடுத்தார்.

ஒருநாள் தன்னுடைய நிழலை சாயா என்ற ஒரு பெண்ணாக உருவம் கொடுத்து விட்டு குழந்தைகளையும் சூரியனையும் பார்ப்பதற்காக விட்டுச் சென்றார்.

@ சாந்தா குதிரை வடிவம் எடுத்து காட்டை நோக்கி சிவ தவத்திற்கு தயாராகி செல்கிறார்.

@ சூரிய பகவானும் சாயா தேவியை சாந்தாவாக நினைத்து அவருடன் வாழ்ந்தார். இதனால் அவர்களுக்கு மனு, சனி மற்றும் தபதி என்ற மூன்று குழந்தைகள் பிறக்கின்றன.

@ தாயின் சாயல் சனி பகவானுக்கு வந்ததால் அவர் கருமையாக தோன்றினார். இதனால் சூரிய பகவான் சனி தன்னுடைய குழந்தையாக இருக்க முடியாது என்று சாயா தேவியை சந்தேகித்தார்.

ஒரு மரம் நட்டால் 100 பேருக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

@ சாயா தேவி தனது குழந்தைகளை அன்புடன் கவனித்து கொண்டார். அவர் தீவிர சிவ பக்தர் என்பதால் ஒரு நாள் சாயாதேவி சிவனுக்கு பிரசாதம் கொண்டு செல்லும் வேளையில் சனி பகவான் பசியின் காரணமாக அதை சாப்பிட முயன்றார்.

அவரின் தாய் சிவன் பூஜைக்கு பிறகே சாப்பிட வேண்டும் என்று கூறியதால் கோபமடைந்த சனி அவரின் தாயை காலால் உதைத்தார். இதனால் சனி பகவானின் ஒரு கால் முடமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here