Sangathamizhan Official Trailer
Sangathamizhan Official Trailer
விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளி போட்டியிலிருந்து விலக இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது.

Sangathamizhan going out of deepavali release – விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ள திரைப்படம் சங்கத்தமிழன்.

இதுவரை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதி இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை செய்யும் மசாலா ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படத்தில் சூரி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவரை ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

பிகில் படத்தின் போஸ்டர் வெளியீட்ட அட்லீ – ரசிகர்கள் கொண்டாட்டம் .!

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளருக்கும், சில வினியோகஸ்தர்களுக்கும் இடையே உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இப்படம் நவம்பர் 15ம் தேதி தள்ளிப்போவதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஆனாலும், படக்குழு இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, தீபாவளிக்கு விஜயின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாவது குறிப்பிடத்தக்கது.