bigil
விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்துடன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் கார்த்தியின் புதிய படங்கள் மோதவுள்ளன.

sanga thamizhan clash with bigil movie on deepavali – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இத்திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்தாட்ட பயிற்சியார், மீனவர் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் வெளியாகும் தீபாவளியன்று விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் வெளியாகிறது. சங்கத்தமிழன் திரைப்படத்தை விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கியுள்ளார்.

Sangathamizhan Teaser : Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar | Kollywood | Tamil cinema | Latest Trailer

அதேபோல், மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை இயக்கியுள்ளார். விஜயின் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தையும் லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி அப்படி பேசாதீங்க விஜய்க்கு அட்வைஸ் செய்த சூர்யா – வைரல் வீடியோ .!

இந்த தீபாவளிக்கு 3 முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.