Sanga tamizhan
Sanga tamizhan

Sanga Tamizhan : 

 இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி.

ஏற்கனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிந்துபாத், மாமனிதன் என அடுத்தடுத்து பல படங்கள் திரைக்குவர காத்திருக்கிறது.

இதைதொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்துக்கு சங்கத்தமிழன் என பெயர் வைத்துள்ளனர்.

சூப்பர் டீலக்ஸ் இயக்குனர் தன் மூஞ்சியில் காறித்துப்ப சொன்னார் – பிரபல நடிகை ஓபன் டாக்!

ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில்,

தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவுற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் வாரத்தில் அவெஞ்சர்ஸ் இத்தனை கோடி வசூல் செய்யுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!

இதே வேகத்தில் சென்றால் இந்த படமும் கூடிய விரைவில் திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

இப்படி ஜெட் வேகத்தில் விஜய் சேதுபதி நடிப்பது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.