Sanga Tamizhan satellite Rights :

சங்கத்தமிழன் படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி கைப்பற்றி உள்ளதாம். விஜய் நடிக்கும் 63-வது படத்தையும் இதே டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட,

சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிந்துபாத், மாமனிதன் என அடுத்தடுத்து பல படங்கள் திரைக்குவர காத்திருக்கிறது.

இதைதொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இப்படத்துக்கு சங்கத்தமிழன் என பெயர் வைத்துள்ளனர்.

ஒரு வார்த்தையில் விஜய்யை புகழ்ந்த சாய் பல்லவி – வைரலாகும் செய்தி!

இதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு ஸ்பெஷல் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி கைப்பற்றி உள்ளதாம். விஜய் நடிக்கும் 63-வது படத்தையும் இதே டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு வார்த்தையில் விஜய்யை புகழ்ந்த சாய் பல்லவி – வைரலாகும் செய்தி!

விஜய் சேதுபதி முதல்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு நாயகிகளாக ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜும் நடித்துள்ளார்கள். மேலும் இப்படம் வாலு, ஸ்கெட்ச் பாணியில் முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாக உருவாகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.