Sandy's Dance In front of Police
Sandy's Dance In front of Police

சாண்டி போட்ட டான்ஸை பார்த்த ரசிகர்கள் கொரானாவே ஓடிடும் என கூறி வருகின்றனர்.

Sandy‘s Dance In front of Police : தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. கலா மாஸ்டர் மூலமாக திரைக்கு அறிமுகமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.

பெரிய படங்கள் OTT வழியாக வெளியானால் இது தான் நடக்கும் – பிரபல தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட எச்சரிக்கை பதிவு.!

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சாண்டி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லண்டனில் இவர் லுங்கி மற்றும் பனியனுடன் ரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது போலீசை பார்த்ததும் பயந்து போய் பவ்யமாக திரும்பியுள்ளார்.

இந்த வீடியோவை தான் அவர் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உன் டான்ஸை பார்த்தால் கொரானாவே ஓடிடும் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.