கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

Sandy Master Joined in Vikram Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்ததைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

ராகு, கேது மற்றும் சனி தோஷம் விலக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்..

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த பிரபலம்.. இவரா?? அப்போ இன்னும் வேற லெவல் தான்.!!

இந்தப்படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசல் ஆகியோர் நடிக்கின்றனர். கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர்களைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்க சாண்டி மாஸ்டர் தான்.

வெளியான Thalapathy 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இதுகுறித்து சாண்டி மாஸ்டர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அப்போ விக்ரம் படத்தில் டான்ஸ் செமையாக இருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கென் கருணாஸ் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்து இருந்தார். இந்த பாடலும் டான்ஸூம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.