sandy
பிகில் திரைப்படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலுக்கு பிக்பாஸ் சாண்டி நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

Sandy dancing for verithanam song video – நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றவர் நடன இயக்குனர் சாண்டி. பிக்பாஸ் போட்டியாளர்களை அவர்களே ரசிக்கும் வகையில் கிண்டலடித்து சிரிக்க வைத்தவர் சாண்டி. இதை பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் கூறியுள்ளனர். கடைசி நாளன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் வெளியேறும் நேரம் வந்த போது அவரிடம் பிக்பாஸே ‘மிஸ் யூ சாண்டி’ எனக்கூறினார்.

இந்த மாதிரி வேலைய மட்டும் நல்லா பாருங்க.. – விஜய் டிவியை விளாசிய மதுமிதா கணவர்

பிக்பாஸ் வீட்டில் இவரின் பேச்சு மற்றும் நடவடிக்கை காரணமாகவே இவருக்கும் பல ரசிகர்கள் உருவாகினர். இறுதிப்போட்டியில் இவருக்கு 5 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெறித்தனம்’ பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரின் மகள் லாலாவும் நடனம் ஆடியுள்ளார். அதோடு, தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியையும் சாண்டி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.