Bigg Boss Sandy
விஸ்வாசம் படத்தின் பாடலால் சாண்டியின் மகள் லாலா மீண்டும் ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார் சாண்டி. ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி அவரை இன்னும் பிரபலப்படுத்தியது.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எந்நேரமும் அவரது மகள் லாலா பற்றிய பேச்சு தான். லாலாவின் குரலை கேட்டாலே கலங்கி விடுவார், நம்மையும் கலங்க வைத்து விடுவார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடந்த போது லாலாவும் சாண்டியின் மனைவியும் உள்ளே சென்றனர். அப்போது கண்ணான கண்ணே பாடல் ஒலித்தது.

அதே போல் தற்போது மீண்டும் கண்ணான கண்ணே பாடல் ஒலிக்க சாண்டியின் மகளும் செய்யும் சேட்டையை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உருக வைத்துள்ளார் சாண்டி.

இதோ அந்த வீடியோ

 

View this post on Instagram

 

No words???????? love you machan ???????? @tamilarasandir

A post shared by SANDY (@iamsandy_off) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.