சனம் ஷெட்டியை விட சூர்யா குள்ளம் என ரசிகர் ஒருவர் கலாய்க்க அதற்கு சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

Sanam Shetty Reply to Trolls On Suriya : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன. ‌‌ அதுமட்டுமல்லாமல் வாடிவாசல் மற்றும் பல படங்கள் உருவாக உள்ளது.

நேற்று சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் இந்தப் படங்களின் போஸ்டர்கள் வெளியாகின. மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வந்தனர். சனம் செட்டியும் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

கோமுக தீர்த்தத்தின் மகிமை.!

புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சூர்யா சனம் ஷெட்டியை விட குள்ளம் என கலாய்த்து இருந்தார். இதற்கு சனம் ஷெட்டி ஹைட்டில் என்ன இருக்கு ப்ரோ, திறமையில் அவர் வெயிட்டு என பதில் அளித்துள்ளார்.

இந்த 2 வகை ஆண்களில் யாரை Date பண்ணுவீங்க? – Nandita Swetha-வின் விசித்திரமான பதில்! | HD