Sanam Shetty Re-entry in BB4

பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sanam Shetty Re-entry in BB4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பஸ் வீட்டில் இருந்து இதுவரை
ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுரேஷ் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே செல்வார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது வரை நடைபெறவில்லை.

இந்த நிலையில் சனம் செட்டி மீண்டும் உள்ளே செல்ல இருப்பதாகவும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் சொந்த வீட்டிற்கு செல்லவில்லை ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்லலாம் என கூறப்படுகிறது.

சனம் ஷெட்டி வெளியேற்றம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் டிவிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.