தனக்கு ஆபாச மெசேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி.

Sanam Shetty Complaint on Police : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. சில படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

சமூக வலைதளப் பக்கங்களில் இப்போது ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் சனம் ஷெட்டி. இப்படியான நிலையில் மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக இவருக்கு ஆபாச புகைப்படங்களை பதிவுகளையும் அனுப்பியுள்ளார்.

டுவிட்டரில் சர்ச்சை பதிவு : பவுலருக்கு அபராதம்..8 போட்டியில் விளையாடத் தடை..

இந்த ஆதாரங்களுடன் அடையாறில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் மற்றும் புகைப்படங்கள் அனுப்பிய அந்த மர்ம நபர் யார்? விரைவில் பிடிபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aamir Khan Divorce | Kajal Wedding Stop | Aishwarya Rajesh | Beast Shooting B’Day | Thalapathy Vijay