Sanam Shetty Blast Meera Mithun
Sanam Shetty Blast Meera Mithun

தன்னைப் பார்த்து விஜய் பயப்படுவதாக கூறிய மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சனம் ஷெட்டி.

Sanam Shetty Blast Meera Mithun : சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களை சீண்டிய வண்ணம் இருக்கிறார்.

தொடர்ந்து விஜய்யும் அவரது குடும்பத்தையும் அதேபோல் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தையும் விமர்சனம் செய்து வருகிறார். இதனால் விஜய் சூர்யா ரசிகர்கள் மீராமிதுன் கண்டபடி திட்டி வருகின்றனர்.

இலைகளுக்கு நடுவே தற்போது சனம் ஷெட்டி வீடியோ ஒன்றில் மீரா மிதுனை விளாசி எடுத்துள்ளார். அந்த வீடியோவில் மீரா இப்போ நீங்கதான் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வருகிறீர்கள்.

விஜய் அவருடைய அப்பாவின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருக்கலாம். ஆனால் பல தடைகளைத் தாண்டி பல விமர்சனங்களைத் தாண்டி அவருடைய நம்பிக்கையாலும் திறமையாலும் இன்று ஜெயித்துக் காட்டியுள்ளார்.

ஆடிய ஆட்டத்துக்கு பதிலடி.. மீரா மிதுனுக்கு விஜய் ரசிகர்கள் அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

அது போன்ற திறமையான நடிகர்களை பற்றி பேசுவதற்கு முன்னர் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். நீங்க விஜய் பற்றி பேசியதால் பயந்துபோய் விஜய் ஆன்லைன் வந்ததாக கூறியது காமெடியாக இருக்கிறது.

அவர்கள் உங்களை எல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை. உங்களுக்காக இறங்கி வரப்போவதும் இல்லை. நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்கிறீர்கள். அது உங்களுக்கு கிடைத்து இருக்கலாம். ஆனால் நிச்சயம் இது வேற மாதிரி தான் போய் முடியும். கூடிய விரைவில் உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டும் நீக்கப்படும். தொடர்ந்து பலரும் ரிப்போர்ட் அடித்து வருகிறார்கள் என கூறியுள்ளார்.