சனம் ஷெட்டி தர்ஷன் மீது கூறிய குற்றசாட்டுகள் அனைத்தும் பொய் என தர்ஷன் ஆர்மியினர் வீடியோ ஒன்றில் மூலமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.
Sanam And Tharshan Issue : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன், இவர் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் மக்களின் மனதை வென்றிருந்தார்.
இப்படியான நிலையில் தர்ஷனின் காதலி தர்ஷன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். தர்ஷன் பிக் பாஸுக்கு பிறகு என்னுடன் போட்டோ எடுத்து கொள்வதில்லை, என்னை அசிங்கப்படுத்துகிறார். முகம் கொடுத்து பேசுவதில்லை என்றெல்லாம் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது தர்ஷன் ஆர்மி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் பிக் பாஸுக்கு பிறகு இருவரும் ஒன்றாக தெரிந்ததும் வித விதமாக போட்டோ எடுத்து கொண்டதும் அம்பலமாகி உள்ளது.
இதனால் சனம் ஷெட்டி தர்ஷன் மீது குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.