Samyukta in Vijay Sethupathi Movie

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே படத்தில் இரண்டு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க உள்ளார் சம்யுக்தா.

Samyukta in Vijay Sethupathi Movie : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் சம்யுக்தா.

இவர் இரு வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது சம்யுக்தாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது தீனதயாளன் என்பவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான சம்யுக்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் சம்யுக்தாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.