
Sarkar Story Reaction : சர்கார் திருட்டு கதைனு சொல்லாதீங்க என முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை என்னுடையது.
செங்கோல் என்ற பெயரில் நான் எளிது கடந்த 2007-ம் ஆண்டிலேயே எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன் என உதவி இயக்குனரான வருண் ராஜேந்தர் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து இந்த பிரச்னையும் சமீபத்தில் சுமூகமாக முடிவுக்கு வந்தது. இதனால் சர்கார் படம் எவ்வித தடையுமில்லாமல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சமுத்ரகனியிடம் சர்கார் கதை விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு சமுத்திரக்கனி அவர்கள் முதலில் திருட்டு கதை என்பதை சொல்வதை நிறுத்துங்கள். அது கேட்கவே வருத்தமாக உள்ளது.
எனக்கு தோன்றிய எண்ணம் மற்றவர்களுக்கும் தோன்றலாம் அதனால் அது திருட்டு கதையாகி விடாது. இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே முருகதாஸ் வருண் ஆகியோர் பேசி தீர்த்திருக்க வேண்டும். இவ்வளவு தூரம் கொண்டு போனதில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியுள்ளார்.