பொத்தி பொத்தி வைத்த ரகசியத்தை ஒரே ட்வீட் மூலம் போட்டு உடைத்துள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அஜித்தின் 61வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.

படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க மேலும் பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அப்படி படத்தில் நடிப்பவர்களின் தகவலை படக்குழு பொத்தி பொத்தி வைத்து வருகிறது.

இப்படியான நிலையில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் நடிகர் சமுத்திரகனி போஸ்டர் மற்றும் அஜித் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு துணிவு வெல்வோம் என பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பது உறுதியாக உள்ளது. இவருடைய இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.