கிளைமாக்ஸில் காத்திருக்கும் ட்விஸ்ட்டால் சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருப்பதாக நடிகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.
இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்துக்கு கூட்டணி அமைத்துள்ள நிலையில் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரகனி சில தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது துணிவு படத்தின் கிளைமாக்ஸில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருப்பதாக கூறியுள்ளார். சமுத்திரகனி அளித்துள்ள இந்த பேட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக எகிற வைத்துள்ளது.