Sambirani Thoobam

சாம்பிராணி தூபம்:

சாம்பிராணி என்பது ஒரு மரப்பிசின் ஆகும். அனைத்து மதத்தினரும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள்,மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மாலைவேளையில், தெய்வ படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் அகலும். லட்சுமி கடாட்சம் பொங்கும்.

* சாம்பிராணியில் வெட்டிவேர் போட்டு தூபமிட காரிய சித்தி உண்டாகும்.

* சாம்பிராணியில் வேப்பிலை போட்டு தூபம் காட்ட சகல நோய்களும் விலகும்.

* சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகை விலகும்.

* சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்டசக்திகள் விலகும்.

* சாம்பிராணியில் ஜவ்வாது போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கொடுக்கும்.

* சாம்பிராணியில் வேப்பம் பட்டையை போட்டு தூபமிட ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை விலகும்.

* சாம்பிராணியில் நாய்கடுகு
போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.

அறிவியல் உண்மை:

பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் .மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும். எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here