Samanthi Poo Benefits | Health Tips | Beauty Tips | Best Health Benefits | | Easy To Follow Daily Health Tips | Samanthi Poo

Samanthi Poo Benefits :

• துலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

தினேஷ் கார்த்திக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் வீரர்!

• துலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கொப்புளம் மேல் பூசி வந்தால் கொப்புளங்கள் குறையும்.

• மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெய்யில் போட்டு வெயிலில் காயவைத்து 3 நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வர மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

• வெள்ளைப் பூண்டை தட்டி, மஞ்சள் துண்டை தட்டி அத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி அடிக்கடி சிறுக சிறுக குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை புரட்டல், ஆராட்டம், தாகம் ஆகியவை குறையும்.

• சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

• சாமந்திப் பூவை நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.

• சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.

• அருகம்புல் பவுடர், மஞ்சள் சாமந்தி பவுடர், பால் பவுடர் ஆகியவற்றை தலா அரை கப் எடுத்து தண்ணீர் விட்டுக் கலந்த பேஸ்ட்டை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவினால் ‘ப்ளீச்’ செய்தது போல் முகம் ‘பளிச்’சென பிரகாசிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here