Samantha_Akkineni

Samantha Tweet : இனி நீங்க நடிக்காதீங்க சமந்தா, வேணும்னா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க என பிரபல விமர்சகர் ஒருவர் ட்வீட் செய்ய ரசிகர் ஒருவர் விசியம் தெரியாமல் கோபப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா சூப்பர் டீலக்ஸ் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்திருந்தார். இவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல விமர்சகரான இட்ஸ் பிரசாந்த் சூப்பர் டீலக்ஸ் படத்தில் உங்களின் நடிப்பு உச்சத்தை தொட்டு விட்டது, இனி நீங்கள் நடிக்கவே வேண்டாம் என புகழ்ந்து பேசி இருந்தார்.

இதற்கு சமந்தா நீங்க பாராட்டுறீங்களா? இல்ல கலாய்க்கறீங்களா என கேள்வி எழுப்ப பிரசாத்தும் பாராட்ட தான் செய்தேன் என பதிலளித்திருந்தார்.

ஆனால் இதனை புரிந்து கொள்ளாத ரசிகர் அவரின் வாழ்க்கையை தீர்மானிக்க நீங்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here